About Me

சென்னை, தமிழ் நாடு, India
சொல்ல நிறைய இருக்கிறது.

Thursday, April 15, 2010

ஏயர் கோன் கலிக்காமனார் 2

தூதனும் சென்று கூற இறைவனை தூதனாய்
அனுப்பியவன் வந்து எனது நோயைத் தீர்ப்பானாகில் என்னால் பொறுத்துக் கொள்ளமுடியாது

இச்சூலையை வயிற்றோடு கிழிப்பேனென்று தனது உடைவாளை எடுத்து வயிற்றை கிழித்தார்.
சூலையும் தீர்ந்தது . உயிரும் தீர்ந்தது.

இதைக் கண்ட அவருடைய மனைவியாரும் கணவரோடே சிவபதவி அடைய வேண்டுமென்று தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சிக்கும் போது ஒருவர் வந்து திரு நம்பியாரூரர் வருகிறார் என்ற செய்தி கேட்டு உடனே அவர் சிறந்த அடியார் வரும் போது அழுவது முறையோ என்று தனது கணவரின் உடலை மறைத்து வைக்க ஏற்பாடு செய்தார்.

அப்பர் எனும் திருநாவுக்கரசர் வரும்போது மாண்ட தன் மகனை மறைத்து வைதத அப்பூதியடிகளும் அவர்தம் மனைவியும் செய்தது போலவே இங்கும் இவரும் செய்கிறார்.

உடனே அவரை வரவேற்பதற்காக‌பரிசனங்களை அனுப்பினார். வீடு முழுதும் மாவிலை தோரணம் கட்ட முறையாக பரிசனங்களும் நம்பியாரூரைவரவேற்றார்கள்

. உள்ளே புகுந்ததும் அவர் அமர்வதற்கு சிறந்த ஆசனமிட அவரும் அமர்ந்தார். முக மலர்ந்தார்.அவரதுபாதத்தை விளக்கி அருச்சனை செய்தனர்.

உடனே சுந்தரரோ " எங்கே கலிக்காமர் அவரது சூலை நோய் தீர்த்து அவரோடு இருந்து விட்டு போகலாமென்றுதான்
வந்தேன்."என்றார்

அவருக்கு தீஙகு எதுவும் இல்லை நன்றாக உறங்குகிறார். என்றனர். சுந்தரரும் விடுவதாக‌ இல்லை. ஏனென்றால் இத்தனை நாள் மனமுருகி இறைவனிடம் பிரார்த்தித்து அல்லவோ
அவரைக் காண வந்திருக்கின்றார்.

தீங்கு ஏதுமில்லையென்றாலும் பரவாயில்லை.
அவர் உறங்கிக் கொண்டிருந்தாலும் பரவாயில்லை.அவரைக் காண வேண்டும். என்றார். வேறு வழியில்லாது உள்ளே சென்று காட்டியதும் சுந்தரர் துடித்துப் போய்விட்டார்
."ஆ என்ன இது இவரைக் கண்டு இவரது சூலையை தீர்க்கவே நான் வந்தேன். இனி நானும் உயிரோடு இருந்து என்ன பயன் . நானும் மாள்வேன்" என்று சொல்லி உடைவாளைப் பற்றினார்.அப்போது அஙகுள்ளோர் எல்லாம் காணும் வண்ணம் ஒரு அதிச‌ய்ம் நிகழ்ந்தது .

கலிக்காமனார் எழுந்து "ஆஹா கேளிரைக் காணப் பெற்றேன் "என்று ஆரூரரைத் தடுத்து உடைவாளைப் பற்றினார். ஆருரர் மண்மீது விழுந்து கலிக்காமரை வணங்கினார்

பின் இருவரும் ஆரத் தழுவினர். இக்காட்சியை அங்குள்ளோரெல்லாம் காணப் பெற்றனர்.

பிறகு அருகிலுள்ள திருப்புன்கூர் தலத்திற்குச் சென்று இறைவனை தொழுது பாடினர். சுந்தரரோ அங்குதான் "அந்தணாலின்"என்று தொடங்கும் திருப் பதிகத்தைப் பாடினார்.

சில நாட்கள் திருப்பெருமங்கலக்குடியில் தங்கியிருந்து பின் திருவாரூர் கிளம்பினார். உடன் கலிக்காமனாரும் அவருடன் அங்கு சென்று அங்கிருக்கும் இறைவனை வழிபட்டனர்.

சிலகாலம் அங்கேயே சுந்தரருடன் தங்கியிருந்து மீண்டும் திருப்பெருமங்கலக்குடியில் வந்தார். இறைவனுக்கு பல்லாண்டுகள் தொண்டுகள் செய்து பின் இறைவனைச் சேர்ந்தார்.
இறைவனை வழிபடும் அடியார்கள் பலவிதமாக் இருந்திருக்கின்றனர். இறைவனை பாவிக்கும் விதமே
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருமாதிரி இருந்தது.சிலர் இறைவனைத் தனது தோழனாகவே பாவிப்பர்.
{சுந்தரர்}.
சிலர் இறைவனாகவே பாவிப்பதுண்டு. கலிக்காமனார் போன்ற பெரும்பாலானோர் இப்படித்தான்
சிலர் இறைவனை குருவாக நினைத்து வழிபடுவ்ர். சிலர் தந்தையாக எண்ணுவர்.சிலர் இறைவனிடம்
தாசனாகவே இருப்பதுண்டு. ஒவ்வொருவரின் பாவம் ஒவ்வொரு முறையாக இருத்தலால் அதனைப் புரிந்து
கொள்ளவும் இயலாது.

ஏயர் கோன் கலிக்காமனார் 1

ஏயர் கோன் கலிக்காமனார்

காவிரி நதியின் வடகரையில் திருப்பெருமங்கலக்குடிஎன்ற ஊரில்
சோழமன்னர்களிடம் பரம்பரையாக சேனாதிபதித் தொழில் செய்த ஏயர் குடியில் கலிக்காமர் என்னும் அடியார் வாழ்ந்து வந்தார். இவர் வாழ்ந்த காலமும் திருவாரூரர் என்னும் சுந்தரர் வாழ்ந்த காலமும் ஒன்றேயாகும்
.
இளமை முதல் அருகிலுள்ள‌ . நந்தனாருக்காக வழி விட்டு விலகிய நந்தீச்வரர் உள்ள கோயிலாகிய திருப் புன்கூர் என்ற திருத்தலத்தில் சென்று தினமும் வழிபட்டு எம்பெருமானுக்கு சேவை செய்வது வழக்கமாக கொண்டிருந்தார் .

புன்க மரத்தின் கீழ் இறைவன் இருந்தமையால் இதற்கு திருப் புன்கூர் என்ற பெயர்ஏற்பட்டது.

இது வைத்தீச்வரன் கோவிலுக்கு அருகில் உள்ள தலமாகும்.

திருவாரூரில் நம்பியாரூரர் என்னும்
சுந்தரமூர்த்தி நாயனார் சிவனையே பரவையார் பால் இரவில் தூது அனுப்பிய செய்தி கலிக்காம நாயனார் கேள்விப் பட்டு மனம் வேதனையுற்றார்.

" ஆ என்ன புதுமை இது எங்கும் கேள்விப்படாததாயிருக்கினறதே
தேவரும் மூவரும் காணாத இறைவனை ஒரு பெண்ணிடம் போய் தூதனுப்புவதா? தகாத செயலைச்செய்த இவன் எப்படி ஒரு தொண்டனாவான்?

.இதைக் கேட்டும் நான் இன்னும் உயிரோடு இருக்கின்றேனே ஒரு நாளிரவு முழுவதும் இறைவன் மலரடி நோவ உழன்றாராமே

கடவுள் இந்த காரியம் செய்ய ஒத்துக் கொண்டாலும் இவர் எப்படி ஏவலாம். அவரை நான் காண நேர்ந்தால் என்ன நடக்கும் என்று எனக்கும் தெரியவில்லையே"



“ நாயனை அடியான் ஏவுங்காரியம் நன்றுசால்
ஏயும் என்றிதனைச் செய்வான் தொண்டனாம் என்னே பாவம்
பேயனேன் பொறுக்கவொண்ணா பிழையினைச் செவியிற்கேட்ப‌
தாயினபின்னும் மாயாதிருந்த‌தென் ஆவி என்பார் ”

கலிக்காமரின் கோபம் அறிந்து சுந்தரரோ மிகவும் மனம் வேதனையுற்றார். ஒரு சிறந்த அடியார் என்மீது சினமாய் இருப்பதா?
அப்படி கூடாதே . அவர் சினம் தணிந்து என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு நான் என்று தெரியவில்லையே " என்று அவர் தினமும் இறைவன் முன் பிரார்த்தனை
செய்யலானார்.


இறைவனே எனக்கு உன்னைவிட்டால் வேறு யார் கதி ? நீதான் எனக்கு ஒரு நல்ல வழிகாட்ட வேண்டும் என நாளும் இறைவனை நினைத்து உருகி வேண்டலானார்.

ஒரு நல்ல அடியாரின் திரு உள்ளத்தில் என்னைப் பற்றி ஒரு மாறுபட்ட கருத்து இருக்கலாமோ என்றெல்லாம் விண்ணப் பிக்கின்றார்


இறைவனும் இவர்கள் இருவரின் பிணக்கைத் தீர்க்க திருவுள்ளம் கொண்டார்.
திருநாவுக்கரசருக்கேற்பட்டது போன்ற சூலை என்னும் கொடிய நோய் வயிற்றில் ஏற்பட்டது. கலிக்காமனாருக்கு தாங்கமுடியாது கீழே விழுந்து புரண்டார். இறைவா என்று சிந்தித்து வந்திப்பார்.

கலிக்காமனாரின் முன் இறைவன் தோன்றி அன்பரே உனது சூலை நோயைத் தீர்க்க சுந்தரர் ஒருவராலேயே முடியும் . அவராலேயன்றி வேறெவராலும் முடியாது என்கிறார்
"
எம்பிரான் எந்தை தந்தை தந்தைதன் கூட்டமெல்லாம்
தம்பிரான் நீரே என்று வழி வழி சார்ந்து வாழும்
இம்பரின் மிக்க வாழ்க்கை என்னை நின்றிடுஞ் சூலை
வம்பென ஆண்டுகொண்டான் ஒருவனோ தீர்ப்பான் வந்து."

நானோ பழைய அடியவன் புதிய அடியவன் வந்துதான் என் சூலை நோயைத் தீர்ப்பானெனில் தீராமலே இருந்து விடட்டும் என்று சொல்ல இறைவன் சென்று விடுகின்றார்.

இங்கே இறைவன் சொல்லியும் கேட்கவில்லை அவர். ஏன்.?அவருக்கு அத்துணை பக்தி அவர்மீது

இறைவன் எப்படிப் பட்டவன் மாலயன் இருவரும் தேடியும் கிடைக்க வொண்ணாத வனை சாதாரண‌மாக ஒரு பெண்ணிற்க்காக தூதனுப்புவ்தா என்ற கோபம்


ஆரூரரிடம் சென்று இறைவன் கூற அவரும் உடனே தான் அங்கு அவரது சூலை நோயைத் தீர்க்க வருவதாக ஒரு தூதுவனிடம் சொல்லி அனுப்பினார்.

Sunday, April 11, 2010

குங்கிலிய கலய நாயனார் 2

திருபனந்தாள் என்ற திருத்தலத்தில் உள்ள சிவலிங்கமானது சாய்ந்திருந்தது.

லிங்கமானது வளைந்ததற்கான காரணம் ஒருமுறை திருப்பனந்தாளில் தாடகை என்ற அம்மை இறைவனை வழிபடும்போது திருமஞ்சனக் குடமெடுத்து இறைவன் திருவடி மேல் விடுவதற்கு தூக்கிய போது சீலை அவிழ்ந்துவிட்டது.

அவிழ்ந்த சீலையை முழங்கையால் தகைந்து திருமுடியெட்டாமல் வருந்திய போது இறைவர் திருமுடி சாய்த்தார் என்று சொல்லப்படுகின்றது அன்று முதல் சிவலிங்கம் வளைந்தே இருந்தது சோழ மன்னன்
எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.

அந்த லிங்கத்தை கயிற்றால் கட்டி வலிமையாக இழுத்துப் பார்த்தும் நேராக்க முடியவில்லை. அந்த ஊர் அரசனோ யானை ,சேனைகள் கொண்டு இழுத்து அப்போதும் முடியாமல் சோர்ந்து விட்டர்ர்.அந்த சமயம் நம் குங்கிலிய கலய நாயனாரோ திருப்பனந்தாளுக்கு இடைப்பட்ட ஒவ்வொரு திருத்தலங்களுக்கும் சென்று கடைசியாக இங்கு வருகிறார்

இவரும் இதைக் கேள்வியுற்று நம் கலயனாரும் அந்த வருத்தத்தில் பங்கு எடுத்துக் கொள்ளவே
முயன்றார். கழுத்தில் கயிற்றை மாட்டி இழுக்க முயற்சிக்க லிங்கமானது நேராகி விட்டது.

"நண்ணிய ஒருமை யன்பின் நாருறு பாசத் தாலே
திண்ணிய தொண்டர் பூட்டி யிளைத்தபின் திறம்பி நிற்க‌
ஒண்ணுமோ கலய னார்தம் ஒருப்பாடு கண்ட போதே
அண்னணலார் நேரே நின்றார் அமரரும் விசும்பில் ஆர்த்தார்".

அன்பெனும் நார் கொண்ட கயிற்றினால் நம் அன்பர் இழுத்தும் கூட சாய்ந்து நிற்பாரோ
இறைவன்.சிவலிங்கம் நேரானது கண்டு உடனே அங்கிருந்த அரசர் பெருமான்
நம் கலய நாயனாரின் திருவடி மீது நெடுஞ்சான்கிடையாக வீழ்ந்தான். வணங்கினான்.

பின்பு சிவபெருமானுக்கு செய்ய வேண்டிய திருப்பணிகளை எல்லாம் ஒழுங்காக
ஆற்றி விட்டு சென்றான்.

கலயனாரும் சில நாட்கள் அங்கேயே தங்கியிருந்து இறைவனை பலகாலும்
வழிபட்டு பின் திருக்கடவூர் வந்து சேர்ந்து மீண்டும் அங்கு திருப்பணிகள் செய்யலானார்.

அப்போது சம்பந்த‌ரும்,திரு நாவுக்கரசரும் அங்கு ஒன்றாக சேர்ந்து அடியவர் கூட்டம்
பின் தொடர திருக்கடவூர் வந்து சேர்ந்தனர். நம் நாயனாரோ மிகவும் களிப்புடன் அவர்களை
வரவேற்று தனது இல்லத்திற்கு அழைத்து அறுசுவை உண்டி அளித்து அனுப்பி வைத்தார்.

பின்னும் சிலகாலம் காலனை காலால் உதைத்த எம்பெருமானுக்கு சிறப்பாக திருத்தொண்டினைப் புரிந்து பின் சிவபதமெய்தினார்.