About Me

சென்னை, தமிழ் நாடு, India
சொல்ல நிறைய இருக்கிறது.

Thursday, April 15, 2010

ஏயர் கோன் கலிக்காமனார் 1

ஏயர் கோன் கலிக்காமனார்

காவிரி நதியின் வடகரையில் திருப்பெருமங்கலக்குடிஎன்ற ஊரில்
சோழமன்னர்களிடம் பரம்பரையாக சேனாதிபதித் தொழில் செய்த ஏயர் குடியில் கலிக்காமர் என்னும் அடியார் வாழ்ந்து வந்தார். இவர் வாழ்ந்த காலமும் திருவாரூரர் என்னும் சுந்தரர் வாழ்ந்த காலமும் ஒன்றேயாகும்
.
இளமை முதல் அருகிலுள்ள‌ . நந்தனாருக்காக வழி விட்டு விலகிய நந்தீச்வரர் உள்ள கோயிலாகிய திருப் புன்கூர் என்ற திருத்தலத்தில் சென்று தினமும் வழிபட்டு எம்பெருமானுக்கு சேவை செய்வது வழக்கமாக கொண்டிருந்தார் .

புன்க மரத்தின் கீழ் இறைவன் இருந்தமையால் இதற்கு திருப் புன்கூர் என்ற பெயர்ஏற்பட்டது.

இது வைத்தீச்வரன் கோவிலுக்கு அருகில் உள்ள தலமாகும்.

திருவாரூரில் நம்பியாரூரர் என்னும்
சுந்தரமூர்த்தி நாயனார் சிவனையே பரவையார் பால் இரவில் தூது அனுப்பிய செய்தி கலிக்காம நாயனார் கேள்விப் பட்டு மனம் வேதனையுற்றார்.

" ஆ என்ன புதுமை இது எங்கும் கேள்விப்படாததாயிருக்கினறதே
தேவரும் மூவரும் காணாத இறைவனை ஒரு பெண்ணிடம் போய் தூதனுப்புவதா? தகாத செயலைச்செய்த இவன் எப்படி ஒரு தொண்டனாவான்?

.இதைக் கேட்டும் நான் இன்னும் உயிரோடு இருக்கின்றேனே ஒரு நாளிரவு முழுவதும் இறைவன் மலரடி நோவ உழன்றாராமே

கடவுள் இந்த காரியம் செய்ய ஒத்துக் கொண்டாலும் இவர் எப்படி ஏவலாம். அவரை நான் காண நேர்ந்தால் என்ன நடக்கும் என்று எனக்கும் தெரியவில்லையே"“ நாயனை அடியான் ஏவுங்காரியம் நன்றுசால்
ஏயும் என்றிதனைச் செய்வான் தொண்டனாம் என்னே பாவம்
பேயனேன் பொறுக்கவொண்ணா பிழையினைச் செவியிற்கேட்ப‌
தாயினபின்னும் மாயாதிருந்த‌தென் ஆவி என்பார் ”

கலிக்காமரின் கோபம் அறிந்து சுந்தரரோ மிகவும் மனம் வேதனையுற்றார். ஒரு சிறந்த அடியார் என்மீது சினமாய் இருப்பதா?
அப்படி கூடாதே . அவர் சினம் தணிந்து என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு நான் என்று தெரியவில்லையே " என்று அவர் தினமும் இறைவன் முன் பிரார்த்தனை
செய்யலானார்.


இறைவனே எனக்கு உன்னைவிட்டால் வேறு யார் கதி ? நீதான் எனக்கு ஒரு நல்ல வழிகாட்ட வேண்டும் என நாளும் இறைவனை நினைத்து உருகி வேண்டலானார்.

ஒரு நல்ல அடியாரின் திரு உள்ளத்தில் என்னைப் பற்றி ஒரு மாறுபட்ட கருத்து இருக்கலாமோ என்றெல்லாம் விண்ணப் பிக்கின்றார்


இறைவனும் இவர்கள் இருவரின் பிணக்கைத் தீர்க்க திருவுள்ளம் கொண்டார்.
திருநாவுக்கரசருக்கேற்பட்டது போன்ற சூலை என்னும் கொடிய நோய் வயிற்றில் ஏற்பட்டது. கலிக்காமனாருக்கு தாங்கமுடியாது கீழே விழுந்து புரண்டார். இறைவா என்று சிந்தித்து வந்திப்பார்.

கலிக்காமனாரின் முன் இறைவன் தோன்றி அன்பரே உனது சூலை நோயைத் தீர்க்க சுந்தரர் ஒருவராலேயே முடியும் . அவராலேயன்றி வேறெவராலும் முடியாது என்கிறார்
"
எம்பிரான் எந்தை தந்தை தந்தைதன் கூட்டமெல்லாம்
தம்பிரான் நீரே என்று வழி வழி சார்ந்து வாழும்
இம்பரின் மிக்க வாழ்க்கை என்னை நின்றிடுஞ் சூலை
வம்பென ஆண்டுகொண்டான் ஒருவனோ தீர்ப்பான் வந்து."

நானோ பழைய அடியவன் புதிய அடியவன் வந்துதான் என் சூலை நோயைத் தீர்ப்பானெனில் தீராமலே இருந்து விடட்டும் என்று சொல்ல இறைவன் சென்று விடுகின்றார்.

இங்கே இறைவன் சொல்லியும் கேட்கவில்லை அவர். ஏன்.?அவருக்கு அத்துணை பக்தி அவர்மீது

இறைவன் எப்படிப் பட்டவன் மாலயன் இருவரும் தேடியும் கிடைக்க வொண்ணாத வனை சாதாரண‌மாக ஒரு பெண்ணிற்க்காக தூதனுப்புவ்தா என்ற கோபம்


ஆரூரரிடம் சென்று இறைவன் கூற அவரும் உடனே தான் அங்கு அவரது சூலை நோயைத் தீர்க்க வருவதாக ஒரு தூதுவனிடம் சொல்லி அனுப்பினார்.

No comments: