திருபனந்தாள் என்ற திருத்தலத்தில் உள்ள சிவலிங்கமானது சாய்ந்திருந்தது.
லிங்கமானது வளைந்ததற்கான காரணம் ஒருமுறை திருப்பனந்தாளில் தாடகை என்ற அம்மை இறைவனை வழிபடும்போது திருமஞ்சனக் குடமெடுத்து இறைவன் திருவடி மேல் விடுவதற்கு தூக்கிய போது சீலை அவிழ்ந்துவிட்டது.
அவிழ்ந்த சீலையை முழங்கையால் தகைந்து திருமுடியெட்டாமல் வருந்திய போது இறைவர் திருமுடி சாய்த்தார் என்று சொல்லப்படுகின்றது அன்று முதல் சிவலிங்கம் வளைந்தே இருந்தது சோழ மன்னன்
எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.
அந்த லிங்கத்தை கயிற்றால் கட்டி வலிமையாக இழுத்துப் பார்த்தும் நேராக்க முடியவில்லை. அந்த ஊர் அரசனோ யானை ,சேனைகள் கொண்டு இழுத்து அப்போதும் முடியாமல் சோர்ந்து விட்டர்ர்.அந்த சமயம் நம் குங்கிலிய கலய நாயனாரோ திருப்பனந்தாளுக்கு இடைப்பட்ட ஒவ்வொரு திருத்தலங்களுக்கும் சென்று கடைசியாக இங்கு வருகிறார்
இவரும் இதைக் கேள்வியுற்று நம் கலயனாரும் அந்த வருத்தத்தில் பங்கு எடுத்துக் கொள்ளவே
முயன்றார். கழுத்தில் கயிற்றை மாட்டி இழுக்க முயற்சிக்க லிங்கமானது நேராகி விட்டது.
"நண்ணிய ஒருமை யன்பின் நாருறு பாசத் தாலே
திண்ணிய தொண்டர் பூட்டி யிளைத்தபின் திறம்பி நிற்க
ஒண்ணுமோ கலய னார்தம் ஒருப்பாடு கண்ட போதே
அண்னணலார் நேரே நின்றார் அமரரும் விசும்பில் ஆர்த்தார்".
அன்பெனும் நார் கொண்ட கயிற்றினால் நம் அன்பர் இழுத்தும் கூட சாய்ந்து நிற்பாரோ
இறைவன்.சிவலிங்கம் நேரானது கண்டு உடனே அங்கிருந்த அரசர் பெருமான்
நம் கலய நாயனாரின் திருவடி மீது நெடுஞ்சான்கிடையாக வீழ்ந்தான். வணங்கினான்.
பின்பு சிவபெருமானுக்கு செய்ய வேண்டிய திருப்பணிகளை எல்லாம் ஒழுங்காக
ஆற்றி விட்டு சென்றான்.
கலயனாரும் சில நாட்கள் அங்கேயே தங்கியிருந்து இறைவனை பலகாலும்
வழிபட்டு பின் திருக்கடவூர் வந்து சேர்ந்து மீண்டும் அங்கு திருப்பணிகள் செய்யலானார்.
அப்போது சம்பந்தரும்,திரு நாவுக்கரசரும் அங்கு ஒன்றாக சேர்ந்து அடியவர் கூட்டம்
பின் தொடர திருக்கடவூர் வந்து சேர்ந்தனர். நம் நாயனாரோ மிகவும் களிப்புடன் அவர்களை
வரவேற்று தனது இல்லத்திற்கு அழைத்து அறுசுவை உண்டி அளித்து அனுப்பி வைத்தார்.
பின்னும் சிலகாலம் காலனை காலால் உதைத்த எம்பெருமானுக்கு சிறப்பாக திருத்தொண்டினைப் புரிந்து பின் சிவபதமெய்தினார்.
Sunday, April 11, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment