எத்தனையொ மகான்கள் இந்த உலகில்
அததனை பேருக்கும் என் வணக்கங்கள்……
பாடம்:
நம் வாழ்வில் இறைவனுக்கு எந்த இடத்தை த்ந்திருக்கின்றோம் என்று பார்க்க
வேண்டும்.மனைவி ,மக்கள்,சுற்றம், நண்பர்கள், காதலர்,வியாபாரம்
என்று எல்லாவற்றிற்கும் முதலிடம் ,இரண்டாமிடம் என்று தந்து விட்டு நம்மையும்
இந்த உலகையும் படைத்த இறைவனுக்கு ஆறாவது பத்தாவது இடத்தைத் தருகின்றோம்.
எப்போது நாம் இறைவனுககு முதலிடத்தைத் தருகின்றோமோ
அப்போது நாம் யாருக்கும் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை.இனறு உலகில் எல்லோரும் எதற்காக இப்படி ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் பய்ம்தான்
.தனக்காகவும் தன் எதிர் கால்த்திற்காகவும் தன் பிள்ளைகளின் எதிர்
காலத்திற்காகவும் சேர்க்கத்தான் இத்தனை ஓட்டம்.
ஆனால் அந்த காலத்திலும் சரி , இந்தகாலத்திலும் சரி இறைவனின் அடியார்கள் எதற்கும் பயப்படுவதில்லை.
அவர்களுக்கு பயமே இல்லை. ஏனென்றால் அவன் நம்மைப் பார்த்துக் கொள்வான் என்று அவனையே சதா சர்வ காலமும் சிந்தித்தவண்ணமே இருப்பார்கள்.
அந்த தூய்மையான இறைவனுக்குத் தான் தன் வாழ்க்கையில் முதலிடத்தை தருவார்கள்
திருக்கடவூர் என்ற ஊர். மிகவும் பெயர் பெற்றது. ஈசன்
பாலனுக்கு பரிந்து காலனையே காலால் உதைத்த இடம்
அந்த புனித ஊரில் எப்போதும் இறைவனையே நினைத்து உருகும் ஒரு
பிராமண குலத்தில் உதித்தவர் தான் நம் குலயனார் என்னும் அடியார்.
மிகவும் ஒழுக்கமுடையவர். தினமும் தவறாது திருக்கோவிலுக்கு சென்று
குங்கிலியம் என்னும் தூபமிட்டு திருத்தொண் டை செய்வது வழக்கம்.
வீடு நிலம் ஏதாவது இழந்தால் நம்மில் சிலர் இறைவனையே தூற்ற
ஆரம்பித்து விடுவோம். அந்த இறைவனுக்கு கண்ணில்லையா?
இதெல்லாம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கின்றானே என்று புலம்புவது வழக்கம்.
அடியார்களுக்கெல்லாம் விருந்து சமைத்து வழங்கி
மனைவி சுற்றமுடன் நன்றாக வாழ்ந்துகொண்டிருந்தார். திடீரென்று வறுமை என்னும்
கொடுமை தாக்கியது.வறுமை வந்தது .கூடவே பொறுமையும் வந்தது. மிகவும் அழகான நிலங்களை எல்லாம் விற்கத்தொடங்கினர். அப்போதும் தாங்கமுடியவில்லை.
என்ன செய்வது? எல்லாவற்றையும் விற்றாகிவிட்டது.
பசியின் கொடுமைதான் ஒன்றிருக்கின்றதே.எத்தனை நாட்கள் தான் பசியுடன் இருப்பது ஒரு நாள் இரண்டு நாள் என்று இருந்து பார்த்தார்கள். நாம் பசியுடன் இருந்தாலும் பரவாயில்லை. குழந்தைகள் , சுற்றம் என்ன செய்வார்கள்..
ஒரு நாள் அதிகாலை அன்பே வடிவாகிய அந்த அம்மையார் கடைசியாக தன் கழுத்திலிருந்த தாலியை கழற்றி அவரிடம் தந்துஅதை வைத்து நெல் வாங்கிவரும்படி கூறினார்.
கலயனாரும் அதைப் பெற்றுக் கொண்டு நெல் வாங்கலாமென்று செல்கின்றார்.செல்லும் வழியில் ஒரு வணிகன் பொதியை சுமந்த படி எதிரே வருகினறான். அவனைப் பார்த்து கலயனாரோ அது என்ன பொதி என்று கேட்கிறார். அந்த வணிகனோ அது குங்கிலியம் என்று கூறுகிறான்.
உடனே அவ்வளவுதான். "ஆஹா குங்கிலியம் இருந்தால் தினமும் இறைவனுக்கு தூபமிட்டு பணி செய்யலாமே "என்று அவருக்கு தோன்றுகின்றது. கையிலிருந்த தங்கத் தாலியை த்ருகின்றேன் .அந்த குங்கிலியத்தை தருகிறாயா என்று கேட்கிறார். அவனும் சம்மதிக்க அதைப் பெற்றுக் கொண்டு நேரே திருக்கோவிலுக்கு செல்கிறார்.
அங்கு இறைவனைக் கண்டு உருகி உருகி வழிபாடு செய்தார்.
அதே சமயம் அவரது வீட்டில் பொன்னும் மணியும் நெல்லும் குவிந்து கிடந்தது.
என்னே இறைவன் செயல். இது நடக்குமா என்று சந்தேகிக்கலாம்.
காலை வேளையில் சமையலறைக்கு சென்று கணவனுக்கும் குழந்தைகளுக்கும் சமைக்க
ஆரம்பித்தார் அவரது மனைவியார். நம் கலியனாரோ பசி ஏதுமின்றி இங்கு இறைவனையே
பார்த்து உருகி உருகி குங்கிலிய தூபமிட்டுக்கொண்டிருந்தார். அப்போது இறைவன் அவர் முன்
தோன்றி நீ மிகவும் பசியுடனிருக்கின்றாய். வீட்டிற்குச் ச்சென்று பால்ன்னம் உண்டு பசி தீர்த்துக்
கொள்வாயாக! என்றார். வீட்டிலே ஏது சாப்பாடு? என்றெல்லாம் யோசிக்கவே இல்லை.
இறைவன் கூறிவிட்டார். அவ்வளவுதான் அவருக்குத் தெரியும். நாயனாரோ ஒன்றும் புரியாது
பயந்த படியேவீட்டிற்கு சென்று விட்டார். உள்ளே நுழைந்ததும் அந்த குவியலைப் பார்க்க
அவருக்கு ஒன்றும் புரியவில்லை. இவை யெல்லாம்எப்படி வந்தன என்று மனைவியிடம்
கேடக இதெல்லாம் அரனார் தந்தது என்று மனைவி கூற "ஆஹா என்னையும் ஒரு பொருட்டாக
எண்ணி பொருட்டாக ஆட்கொண்டனையே "என்று குதூகலமடைந்து கைகூப்பி நின்றார்.சிவனடியார்களை எல்லாம்
அழைத்து விருந்து அளிக்கின்றார்.
நிறைய தான தர்மங்கள் செய்கின்றார். அடியார்களை அழைத்து அன்னம், தயிர், கறி, பால்,நெய்
என்று அவர் பசி தீர்க்கின்றார். இப்படியே அன்னமிட்டு , இறைவனை வணங்கி வருகின்றார்.
தொடரும்
Tuesday, April 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment