தூதனும் சென்று கூற இறைவனை தூதனாய்
அனுப்பியவன் வந்து எனது நோயைத் தீர்ப்பானாகில் என்னால் பொறுத்துக் கொள்ளமுடியாது
இச்சூலையை வயிற்றோடு கிழிப்பேனென்று தனது உடைவாளை எடுத்து வயிற்றை கிழித்தார்.
சூலையும் தீர்ந்தது . உயிரும் தீர்ந்தது.
இதைக் கண்ட அவருடைய மனைவியாரும் கணவரோடே சிவபதவி அடைய வேண்டுமென்று தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சிக்கும் போது ஒருவர் வந்து திரு நம்பியாரூரர் வருகிறார் என்ற செய்தி கேட்டு உடனே அவர் சிறந்த அடியார் வரும் போது அழுவது முறையோ என்று தனது கணவரின் உடலை மறைத்து வைக்க ஏற்பாடு செய்தார்.
அப்பர் எனும் திருநாவுக்கரசர் வரும்போது மாண்ட தன் மகனை மறைத்து வைதத அப்பூதியடிகளும் அவர்தம் மனைவியும் செய்தது போலவே இங்கும் இவரும் செய்கிறார்.
உடனே அவரை வரவேற்பதற்காகபரிசனங்களை அனுப்பினார். வீடு முழுதும் மாவிலை தோரணம் கட்ட முறையாக பரிசனங்களும் நம்பியாரூரைவரவேற்றார்கள்
. உள்ளே புகுந்ததும் அவர் அமர்வதற்கு சிறந்த ஆசனமிட அவரும் அமர்ந்தார். முக மலர்ந்தார்.அவரதுபாதத்தை விளக்கி அருச்சனை செய்தனர்.
உடனே சுந்தரரோ " எங்கே கலிக்காமர் அவரது சூலை நோய் தீர்த்து அவரோடு இருந்து விட்டு போகலாமென்றுதான்
வந்தேன்."என்றார்
அவருக்கு தீஙகு எதுவும் இல்லை நன்றாக உறங்குகிறார். என்றனர். சுந்தரரும் விடுவதாக இல்லை. ஏனென்றால் இத்தனை நாள் மனமுருகி இறைவனிடம் பிரார்த்தித்து அல்லவோ
அவரைக் காண வந்திருக்கின்றார்.
தீங்கு ஏதுமில்லையென்றாலும் பரவாயில்லை.
அவர் உறங்கிக் கொண்டிருந்தாலும் பரவாயில்லை.அவரைக் காண வேண்டும். என்றார். வேறு வழியில்லாது உள்ளே சென்று காட்டியதும் சுந்தரர் துடித்துப் போய்விட்டார்
."ஆ என்ன இது இவரைக் கண்டு இவரது சூலையை தீர்க்கவே நான் வந்தேன். இனி நானும் உயிரோடு இருந்து என்ன பயன் . நானும் மாள்வேன்" என்று சொல்லி உடைவாளைப் பற்றினார்.அப்போது அஙகுள்ளோர் எல்லாம் காணும் வண்ணம் ஒரு அதிசய்ம் நிகழ்ந்தது .
கலிக்காமனார் எழுந்து "ஆஹா கேளிரைக் காணப் பெற்றேன் "என்று ஆரூரரைத் தடுத்து உடைவாளைப் பற்றினார். ஆருரர் மண்மீது விழுந்து கலிக்காமரை வணங்கினார்
பின் இருவரும் ஆரத் தழுவினர். இக்காட்சியை அங்குள்ளோரெல்லாம் காணப் பெற்றனர்.
பிறகு அருகிலுள்ள திருப்புன்கூர் தலத்திற்குச் சென்று இறைவனை தொழுது பாடினர். சுந்தரரோ அங்குதான் "அந்தணாலின்"என்று தொடங்கும் திருப் பதிகத்தைப் பாடினார்.
சில நாட்கள் திருப்பெருமங்கலக்குடியில் தங்கியிருந்து பின் திருவாரூர் கிளம்பினார். உடன் கலிக்காமனாரும் அவருடன் அங்கு சென்று அங்கிருக்கும் இறைவனை வழிபட்டனர்.
சிலகாலம் அங்கேயே சுந்தரருடன் தங்கியிருந்து மீண்டும் திருப்பெருமங்கலக்குடியில் வந்தார். இறைவனுக்கு பல்லாண்டுகள் தொண்டுகள் செய்து பின் இறைவனைச் சேர்ந்தார்.
இறைவனை வழிபடும் அடியார்கள் பலவிதமாக் இருந்திருக்கின்றனர். இறைவனை பாவிக்கும் விதமே
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருமாதிரி இருந்தது.சிலர் இறைவனைத் தனது தோழனாகவே பாவிப்பர்.
{சுந்தரர்}.
சிலர் இறைவனாகவே பாவிப்பதுண்டு. கலிக்காமனார் போன்ற பெரும்பாலானோர் இப்படித்தான்
சிலர் இறைவனை குருவாக நினைத்து வழிபடுவ்ர். சிலர் தந்தையாக எண்ணுவர்.சிலர் இறைவனிடம்
தாசனாகவே இருப்பதுண்டு. ஒவ்வொருவரின் பாவம் ஒவ்வொரு முறையாக இருத்தலால் அதனைப் புரிந்து
கொள்ளவும் இயலாது.
Thursday, April 15, 2010
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
வணக்கம் எனது முதல் வருகை இது தொடருங்கள் மீண்டும் வருகிறேன்
commance test
Post a Comment